ஹலோ எப்.எம். 106.4 ரேடியோவில், இன்று எம்.ஜி.ஆர். நினைவு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பு
ஹலோ எப்.எம். 106.4 ரேடியோவில் இன்று (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நினைவு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. எம்.ஜி.ஆர். நினைவு தினம் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், வாத்தியார் என்று தமிழக மக்கள் அனைவராலும் போற்றப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்
நெல்லை,
ஹலோ எப்.எம். 106.4 ரேடியோவில் இன்று (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நினைவு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
எம்.ஜி.ஆர். நினைவு தினம்மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், வாத்தியார் என்று தமிழக மக்கள் அனைவராலும் போற்றப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 29–வது நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரின் நினைவை போற்றும் வகையில் சிறப்பு ஹலோ தமிழா நிகழ்ச்சி இன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை ஹலோ எப்.எம். 106.4 ரேடியோவில் ஒலிபரப்பாகிறது.
நடிகை லதா– தீனதயாளன் பங்கேற்புதமிழகத்தின் திரைத்துறையிலும், அரசியல் அரங்கிலும் தனக்கென தனி இடம் பிடித்த எம்.ஜி.ஆரை பற்றிய இந்த சிறப்பு நிகழ்ச்சியில், அவருடன் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்த மூத்த நடிகை லதா, எம்.ஜி.ஆர். பற்றிய சிறப்பு புத்தகம் எழுதிய எழுத்தாளர் பா.தீனதயாளன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய தாக்கம், வெற்றிகரமான கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட விதம் பற்றியும், அரசியல் தலைவராக செல்வாக்கு பெற்று அன்று முதல் இன்று வரை மக்கள் திலகமாக மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பது குறித்தும், தங்கள் நினைவுகளை இன்றைய சிறப்பு ஹலோ தமிழாவில் பகிர்ந்து கொள்கின்றனர்.