பணிநிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யு. மருத்துவகல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அவுட்சோர்சிங் ஒப்பந்த ஊழிய
திருவாரூர்,
பணி நிரந்தரம் செய்யக்கோரி சி.ஐ.டி.யு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அவுட்சோர்சிங் ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், சங்க தலைவர் சசிக்குமார், செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பணி புரியும் அவுட்சோர்சிங் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். வார விடுமுறை, பண்டிகை கால போனஸ், விபத்து காப்பீடு ஆகிய அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு சீருடை, கையுறை, காலணி போன்ற உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கருணாநிதி, சம்பந்தம், லெனின், சங்க துணை தலைவர் ராமன், துணை செயலாளர் முத்துவேல், பொருளாளர்கள் ஜெயசுதா, மணிமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.