காற்றாலை நிறுவன அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

x
தினத்தந்தி 24 Dec 2016 1:30 AM IST (Updated: 24 Dec 2016 12:53 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை தியாகராஜநகர் 7–வது குறுக்குத்தெருவில் தனியார் காற்றாலைக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கதவுகள் நேற்று காலையில் திறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் சிதறிக் கிடந்தன. சில ஆவணங்கள் திருட்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது.

நெல்லை,

மர்ம மனிதர்கள் நேற்று முன்தினம் இரவில் கதவை உடைத்து இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் காற்றாலை நிறுவனத்தின் மேலாளர் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கேட்டையும் உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story