கச்சத்தீவு புதிய அந்தோணியார் ஆலய திறப்பு விழா தமிழக மீனவர்கள் பங்கேற்பு
கச்சத்தீவில் புதிய அந்தோணியார் ஆலய திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்றனர். புதிய ஆலயம் இந்தியாவிற்கும்–இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவில் ஓட்டு கட்டிடத்தில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதன் அருகே இலங்கை அரசு மூ
ராமேசுவரம்,
கச்சத்தீவில் புதிய அந்தோணியார் ஆலய திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்றனர்.
புதிய ஆலயம்இந்தியாவிற்கும்–இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவில் ஓட்டு கட்டிடத்தில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதன் அருகே இலங்கை அரசு மூலம் கச்சத்தீவில் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் தமிழக மீனவர்கள் 100 பேர் மட்டும் கலந்து கொள்ள மத்திய, மாநில அரசு அனுமதி வழங்கி இருந்தது. இருந்தபோதிலும் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள் 6 பேர் உள்பட 82 பேர் மட்டுமே விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர். நேற்று ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து அவர்கள் 3 விசைப்படகுகளில் கச்சத்தீவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். புதிய ஆலயத்தில் வைப்பதற்காக புதிய அந்தோணியார் சொரூபம் ஒன்றையும் அவர்கள் எடுத்து சென்றனர்.
கல்வெட்டுகள்காலை 10 மணிக்கு அவர்கள் கச்சத்தீவு சென்றடைந்தனர். ஆனால் காலை 9 மணிக்கே புதிய ஆலய திறப்பு விழா முடிவடைந்தது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து சென்ற 82 பேரும் ஆலயத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. புதிய அந்தோணியார் ஆலயத்தை இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் திறந்து வைத்தார்.
புதிய ஆலயத்தின் முன்பு தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் எழுதி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை இலங்கை கடற்படை தளபதி விஜயகுணரத்னே, யாழ்ப்பாண இந்திய துணை தூதரக அதிகாரி நடராஜன், யாழ்ப்பாண மாவட்ட கலெக்டர் வேதநாயகம், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே ஆகியோர் திறந்து வைத்தனர்.
சிறப்பு திருப்பலிதொடர்ந்து புதிய ஆலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் ராமேசுவரத்தில் இருந்து சென்ற மீனவர்களும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து வந்திருந்தவர்களும் கலந்து கொண்டனர். பின்னர் ராமேசுவரத்தில் இருந்து கொண்டு சென்ற அந்தோணியார் சொரூபத்தை புதிய ஆலயத்தில் வைப்பதற்காக ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாரசத்திடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
சிறப்பு திருப்பலி முடிவடைந்ததும் அங்கிருந்து புறப்பட்ட 82 பேரும் மாலை 4 மணிக்கு ராமேசுவரம் வந்தடைந்தனர். ஆலய திறப்பு விழாவையொட்டி கச்சத்தீவை சுற்றிலும் இலங்கை கடற்படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்புஆண்டு தோறும் கச்சத்தீவு திருவிழாவுக்கு செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தூதரகம் அனுமதி வழங்கும். அந்த அனுமதியின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பத்திரிகையாளர்களை கச்சத்தீவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யும். இந்த ஆண்டும், கச்சத்தீவில் நேற்று நடந்த கச்சத்தீவு கிறிஸ்தவ ஆலய திறப்பு விழாவுக்கு பத்திரிகை அலுவலகங்கள், ஊடகங்கள் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பி அந்த விண்ணப்பங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு பத்திரிகையாளர்கள் கச்சத்தீவுக்கு சென்று செய்தி சேகரிக்க அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த அனுமதி கடிதத்தை பத்திரிகையாளர்கள் கொடுத்த பிறகும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கச்சத்தீவுக்கு செல்ல முறையான அனுமதி வழங்க வில்லை. கச்சத்தீவில் நமக்கு உள்ள உரிமையை நிலை நாட்டும் வகையில் செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறு தமிழக மாவட்ட நிர்வாகமே அனுமதி வழங்காதது பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இலங்கை அரசாங்கமே அனுமதி கொடுத்த பிறகும் நமக்கு உள்ள உரிமையை இழக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமே இவ்வாறு அனுமதி மறுத்தது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
ஏற்புடையது அல்லகச்சத்தீவு நமக்கு சொந்தம் என்று தமிழக அரசு ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் போது பத்திரிகையாளர்களை இவ்வாறு கச்சத்தீவுக்கு செல்ல மாவட்ட கலெக்டரே அனுமதி வழங்காதது நிச்சயமாக ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர்கள் பெரிதும் குறைபட்டுக் கொண்டனர்.