மத்திய அரசை கண்டித்து தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2016 4:00 AM IST (Updated: 24 Dec 2016 1:11 AM IST)
t-max-icont-min-icon

அனைத்திந்திய கிராம தபால் ஊழியர் சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் கோட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய கிராம தபால் ஊழியர் சங்க நெறியாளர் கணேசன் சிறப்பு விருந்த

திண்டுக்கல்

அனைத்திந்திய கிராம தபால் ஊழியர் சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் கோட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய கிராம தபால் ஊழியர் சங்க நெறியாளர் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், 7–வது ஊதியக்குழு அறிக்கையை மத்திய அரசு காலதாமதமின்றி முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் சம்பளத்தை குறைப்பதை கைவிட வேண்டும். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள கஷ்டங்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமார் 200 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story