அகளி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேர் கைது


அகளி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2016 3:00 AM IST (Updated: 24 Dec 2016 1:42 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு மாவட்டம் அகளி வனப்பகுதியில் ஒரு சிலர் சந்தன மரங்களை வெட்டி கொண்டு இருப்பதாக அகளி வனத்துறை அதிகாரி ஆறுமுகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அவர் வனத்துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சந்தன மரங்களை வெட்டி கொண்டு இரு

கொழிஞ்சாம்பாறை,

பாலக்காடு மாவட்டம் அகளி வனப்பகுதியில் ஒரு சிலர் சந்தன மரங்களை வெட்டி கொண்டு இருப்பதாக அகளி வனத்துறை அதிகாரி ஆறுமுகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அவர் வனத்துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சந்தன மரங்களை வெட்டி கொண்டு இருந்த 4 பேர் வனத்துறை அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது பிடிபட்ட வாலிபர்கள் மலப்புரம் மாவட்டம் தென்கரையை சேர்ந்த அப்துல்ரகுமான்(வயது 33), அப்துல்தாகீர்(34), கந்தன்(45), பாலன்(43) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 8 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், காரையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களை மன்னார்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story