புகைப்பிடித்தல் குறித்த விளம்பர பதாகை வைக்காத கடைகளுக்கு அபராதம்
அரியலூர் சின்னகடைதெரு, பெரியகடைதெரு, பட்டுநூல்கார தெரு உள்ளிட்ட இடங்களிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சில கடைகளில், புகைப்பிடித்தல் குறித்த விழிப்புணர்வு பதாகையை வைக்காததால்
அரியலூர்
அரியலூர் சின்னகடைதெரு, பெரியகடைதெரு, பட்டுநூல்கார தெரு உள்ளிட்ட இடங்களிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சில கடைகளில், புகைப்பிடித்தல் குறித்த விழிப்புணர்வு பதாகையை வைக்காததால், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் தடையை மீறி விற்கப்பட்ட சிகரெட், புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story