அகதிகள் முகாமில் குடிசை எரிந்து சாம்பல்


அகதிகள் முகாமில் குடிசை எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 24 Dec 2016 3:13 AM IST (Updated: 24 Dec 2016 3:13 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருபவர் கிளிநொச்சியை சேர்ந்த பொன்னம்மாள் (வயது 52). நேற்று முன்தினம் இரவு பொன்னம்மாளும் அவரது மகன் தேவேந்திரனும் (26) குடிசையில் தூங்கிக்

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருபவர் கிளிநொச்சியை சேர்ந்த பொன்னம்மாள் (வயது 52). நேற்று முன்தினம் இரவு பொன்னம்மாளும் அவரது மகன் தேவேந்திரனும் (26) குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிசையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை எலி தட்டி விட்டதில் விளக்கு சரிந்து தீப்பிடித்தது. அப்போது கண்விழித்த பொன்னம்மாளும், தேவேந்திரனும் குடிசையை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

தகவலறிந்ததும் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் பொன்னம்மாளின் குடிசை முழுமையாக தீயில் எரிந்து சாம்பலானது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story