மின்ஊழியரை தாக்கியவருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது வாணியமல்லி கிராமம். வார்தா புயலுக்கு பின்னர் இந்த கிராமத்தில் சேதம்
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது வாணியமல்லி கிராமம். வார்தா புயலுக்கு பின்னர் இந்த கிராமத்தில் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகளில் பிற மாவட்டத்தை சேர்ந்த மின்ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மின் ஊழியர் சடகோபன் (வயது 43) என்பவரிடம் வாணியமல்லி கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் (48) முதலில் தனது வீட்டு மின் இணைப்பை சீரமைத்து விட்டு பின்னர் மற்ற வீடுகளுக்கான மின்இணைப்பை சீரமைக்கும்படி கூறினார். மேலும் சடகோபனை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் ஊழியரை தாக்கிய நாகலிங்கத்தை தேடி வருகின்றனர்.

Next Story