பல்லாவரத்தில் இரும்பு வியாபாரியை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய தாதா கைது
பல்லாவரத்தில் இரும்பு வியாபாரியை காரில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய நெல்லையை சேர்ந்த பிரபல தாதாவை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,

கடத்தி மிரட்டல்
சென்னையை அடுத்த கிண்டி மடுவங்கரை காந்தி மார்க்கெட்டில் இரும்பு கடை நடத்தி வருபவர் முகமது அலி (வயது40). இவர் தொழிற்சாலைகளில் இரும்பு கழிவுபொருட்களை வாங்கி வியாபாரம் செய்வதும், பழைய கட்டிடங்களை உடைக்கும் காண்டிராக்டர் தொழிலும் செய்துவந்தார்.
கடந்த 18-ந்தேதி பல்லாவரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் காரில் சாப்பிடவந்த முகமதுஅலியை மர்மகும்பல் கடத்திச் சென்றது. பின்னர் வளசரவாக்கத்தில் அவரை அடித்து உதைத்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர். அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றவுடன் ஒன்றரை கோடிக்கு சொத்து பத்திரங்களும், ரூ.50 லட்சமும் உடனே கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினர்.
போலீசில் புகார்
இதில் பயந்துபோன முகமது அலி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடத்தப்பட்ட விஷயத்தை கூறாமல் ரூ.10 லட்சம் கொண்டுவரும்படி கூறி வளசரவாக்கத்தில் தான் வைக்கப்பட்டு இருந்த இடத்தையும் கூறினார். அதன்படி ரூ.10 லட்சத்தை முகமது அலியிடம் அவரது உறவினர்கள் கொடுத்தனர். அவர் கடத்தல் கும்பல் தலைவனிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்துவிட்டு தன்னை விட்டுவிடும்படி கூறினார்.
கடத்தல் கும்பல் இரவு 9 மணிக்குள் மீதி பணம் ரூ.40 லட்சத்தை கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி அனுப்பினர். இதில் பயந்துபோன முகமது அலி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் செய்தார்.
திடுக்கிடும் தகவல்கள்
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண் தலைமையில் பல்லாவரம் உதவி கமிஷனர் விமலன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
கடத்தலில் ஈடுபட்டது நெல்லையை சேர்ந்த பிரபல தாதா பாளையங்கோட்டை ரபீக் (50) என தெரியவந்தது. நெல்லையை சேர்ந்த ரபீக்கின் மாமனார் ஜிந்தா 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்கு பழிவாங்க இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியில் வந்த கவுஸ் என்பவரை ரபீக் தலைமையிலான கும்பல் 1992-ல் கொலை செய்தது.
தலையை துண்டித்து கொலை
ஜிந்தா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சேக் அலி பரங்கிமலையில் தலைமறைவாக இருந்தார். 1994-ம் ஆண்டு சேக் அலியை தலையை துண்டித்து கொலை செய்த ரபீக் கும்பல், தலையை புழல் அருகே வீசிச் சென் றது. சென்னையில் அப்போது இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் சென்னை அண்ணா நகரில் தங்கியிருந்த ரபீக் கிண்டி மற்றும் சென்னையில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்துவந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரபீக்குக்கு கிண்டியில் உள்ள வியாபாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
மிரட்டி பணம் பறிப்பு
ரபீக்கின் மிரட்டலுக்கு பயந்து பல தொழில் அதிபர்கள், வியாபாரிகள் அவரிடம் பணம் கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. போலீசில் புகார் செய்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து என அஞ்சி பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இதுவரை புகார் செய்யவில்லை.
இந்நிலையில் தான் முகமது அலி கிண்டியில் பிரபல வியாபாரியாக இருப்பதால் அவரிடம் பணம் அதிகம் இருக்கும். அவரை கடத்தினால் உயிர் பயத்தில் போலீசுக்கு செல்லமாட்டார் என்று ரபீக்கின் நண்பர்களான கிண்டியை சேர்ந்த சில இரும்பு வியாபாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முகமது அலியை ரபீக் கும்பல் கண்காணித்து வந்தது. பல்லாவரம் ஓட்டலில் சாப்பிட முகமது அலி காரை நிறுத்தியபோது அவரை கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்டுள்ளனர். முகமது அலியை கடத்தி அவரிடம் ரூ.10 லட்சம் பறித்துக்கொண்டு மீதி பணம் ரூ.40 லட்சத்தை இரவுக்குள் தரவேண்டும் என மிரட்டி அனுப்பி உள்ளனர்.
ரபீக் கைது
தனிப்படையினர் விசாரணையில் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தனிப்படையினர் தீவிரமாக ரபீக்கை தேடிவந்த நிலையில் நேற்று அண்ணா நகரில் அவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6½ லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கடத்தலுக்கு துணையாக இருந்த அவரது கூட்டாளிகள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.2 கோடி கேட்டு இரும்பு வியாபாரி கடத்தப்பட்ட சம்பவம் கிண்டி வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story