எண்ணூரில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு


எண்ணூரில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 24 Dec 2016 3:52 AM IST (Updated: 24 Dec 2016 3:52 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் உலகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவருடைய மனைவி உஷா(வயது 48). உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த இவர், நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு எழுந்து சென்றார்.

திருவொற்றியூர்,

எண்ணூர் உலகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவருடைய மனைவி உஷா(வயது 48). உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த இவர், நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு எழுந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த சுமார் 20 அடி ஆழம் கொண்ட தரைமட்ட உறை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

கிணற்றுக்குள் இருந்தபடி அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு எழுந்து வந்த கோடீஸ்வரன், உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் எண்ணூர் அனல் மின்நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்த உஷாவை உயிருடன் மீட்டனர். 

Next Story