வடபழனியில் லோடு ஆட்டோவில் போதை பொருள் கடத்தல் 2 பேர் கைது


வடபழனியில் லோடு ஆட்டோவில் போதை பொருள் கடத்தல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2016 4:11 AM IST (Updated: 24 Dec 2016 4:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வடபழனி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வடபழனி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி அதில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், லோடு ஆட்டோவில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் அதிகளவில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், அரும்பாக்கத்தைச் சேர்ந்த அய்யாசாமி (வயது 50) மற்றும் அம்பத்தூர், சூரப்பட்டை சேர்ந்த விஜயன் (39) என்பதும், தடை செய்யப்பட்ட அந்த போதை பொருட்களை அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்ய லோடு ஆட்டோவில் கடத்திச் சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து லோடு ஆட்டோ, 42 கிலோ குட்கா, 16 மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.13 லட்சத்து 13 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story