கலெக்டரிடம், பாசிக் ஊழியர்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயற்சி
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி கலெக்டரிடம் பாசிக் ஊழியர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயற்சி செய்தனர். பாசிக் ஊழியர்கள் புதுச்சேரி பாசிக் அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நிலுவையில் உள்ள சம்பளத்
புதுச்சேரி
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி கலெக்டரிடம் பாசிக் ஊழியர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க முயற்சி செய்தனர்.
பாசிக் ஊழியர்கள்புதுச்சேரி பாசிக் அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், மாதந்தோறும் சம்பளம் முழுவதையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
பாசிக் தலைமை அலுவலகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம், சுதேசி மில் அருகே உண்ணாவிரதம், பட்டை நாமம் அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஒப்படைக்க முயற்சிஇந்தநிலையில் ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் ரேஷன்கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கப் போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக அவர்கள் நேற்று மதியம் அவர்கள் பாசிக் தலைமை அலுவலகம் அருகில் கூடினர். அங்கிருந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு புண்ணியகோடி தலைமை தாங்கினார்.
ஊர்வலம் திண்டிவனம் சாலை, வி.வி.பி. நகர் வழியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் கொடுக்க முயற்சி செய்தனர். போலீசார் அவர்களுக்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கை மனுபின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மட்டுமே கலெக்டர் சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர். தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் 5 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலெக்டரின் செயலாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.