ராமானுஜன்: 5. தற்கொலை முயற்சி!
வரலாற்றின் பக்கங்களில் பலரும் அறிந்திராமல் மறைந்து கிடக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் தொடர் இது. இதில் கணிதமேதை ராமானுஜனின் பின்னணி குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன.கணித ஆராய்ச்சிக்குஇங்கிலாந்து செல்ல ராமானு ஜனுக்கு ஏற்பட்ட தடைகளைப் பற்றியும் கடைசியாக அவர் எடுத்த முடிவு குறித்தும் கடந்த அத்தியாயத்தில்
வரலாற்றின் பக்கங்களில் பலரும் அறிந்திராமல் மறைந்து கிடக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் தொடர் இது. இதில் கணிதமேதை ராமானுஜனின் பின்னணி குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன.கணித ஆராய்ச்சிக்குஇங்கிலாந்து செல்ல ராமானு ஜனுக்கு ஏற்பட்ட தடைகளைப் பற்றியும் கடைசியாக அவர் எடுத்த முடிவு குறித்தும் கடந்த அத்தியாயத்தில் படித்தோம். இங்கிலாந்தில் அவருக்கு கிடைத்த மரியாதையையும் தற்கொலைக்கு முயலும் அளவுக்கு நேர்ந்த சோகத்தையும் இந்தவாரம் பார்க்கலாம்.
1914 மார்ச் 17–ந் தேதி இங்கிலாந்து செல்லும் ‘எஸ்.எஸ்.நேவாசா’ கப்பலில் ராமானுஜனுக்குப் பயணச்சீட்டு வாங்கப்பட்டது. மூன்று நாட்கள் முன்னதாகவே அம்மாவையும் மனைவியையும் கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்த ராமானுஜன், பயணத்திற்குத் தயாரானார்.
முதல் வேலையாக உச்சி குடுமியையும் பஞ்ச கச்சத்தையும் மாற்ற வேண்டும் என்றார் ராமச்சந்திர ராவ். அதன்படியே நடந்தது. கரண்டிகளை (ஸ்பூன்) வைத்து வெள்ளைக்காரர்கள் போல சாப்பிடுவது எப்படி என்றும் அவரே சொல்லிக்கொடுத்தார்.
அதுவரை கையால் மட்டுமே சாப்பிட்டு வந்த ராமானுஜன், அதனைக் கஷ்டப்பட்டே கற்றுக் கொண்டார். குடுமி போனதையும், கோட் சூட்டுக்கு மாறியதையும் ஜீரணிக்க முடியாமல் தவித்தார். இருந்தாலும் வேறென்ன வழி.
அரசு தலைமை வழக்கறிஞர் சீனிவாச அய்யங்கார் நடத்திய பாராட்டு விழாவில், சென்னை துறைமுகத் தலைவர் பிரான்சிஸ் ஸ்பிரிங், பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி அய்யங்கார் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். தன் ஊழியர் ஒருவர், ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து செல்வதைப் பெருமையாக நினைத்த பிரான்சிஸ், கப்பலில் சென்ற முக்கிய பிரமுகர் களுக்கெல்லாம் ராமானுஜனை அறிமுகப்படுத்தினார். அவருக்கு சைவ உணவு மட்டுமே வழங்கிட வேண்டுமென கப்பல் கேப்டனுக்கு கடிதம் அனுப்பினார்.
நெஞ்சமெல்லாம் கணக்குகளாகவும், நினைவெல்லாம் அவை பற்றிய கனவுகளாகவும், கப்பலேறிய ராமானுஜனின் கண்களில் இருந்து சென்னை மாநகரம் மெல்ல மறையத்தொடங்கியது. கப்பலில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அவரால் உட்கார முடியவில்லை. உட்கார்ந்திருந்த இரண்டாம் வகுப்பு பயண அறையின் நீள, அகலங்களை வைத்து ஏதோ கணக்கெல்லாம் போட்டுப்பார்த்தார்.
கணித சிந்தனைகளில் மூழ்கி பல நேரங்களில் உணவை மறந்தார். போதாக்குறைக்கு கடல் வாடைக்காற்றும் சேர்ந்து கொண்டு ராமானுஜனுக்கு உடல் நலக்குறைவை உண்டு பண்ணியது. வாந்தியும், தூக்கம் வராமையும் பாடாய்படுத்தின. கப்பல் மருத்துவர் அளித்த சிகிச்சையில் குணமானார்.
திட்டமிட்டபடி ஒரு மாத பயணத்திற்குப் பிறகு, 1914 ஏப்ரல் 14–ந் தேதி லண்டன் தேம்ஸ் துறைமுகத்தில் சென்று இறங்கினார் ராமானுஜன்.
சென்னைக்கு வந்து ராமானுஜனுக்கு நேரில் அழைப்பு விடுத்த நெவில் துறைமுகத்தில் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார். கேம்ப்ரிட்ஜ் நகரில் அமைந்த தமது வீட்டில் தங்க வைத்தார். பின்னர், ட்ரினிட்டி கல்லூரிக்கு அழைத்துச் சென்று பேராசிரியர் ஹார்டியிடம் ஒப்படைத்தார்.
முதல் சந்திப்பிலேயே மிக எளிமையாக, நேர்மையாக, யதார்த்தமாக பேசிய ஹார்டியைப் பார்த்து ராமானுஜன் நெகிழ்ந்தே போனார். இருவரும் அணுக்கமான நண்பர்களாயினர்.
தானே விண்ணப்பம் வாங்கி, பூர்த்தி செய்து, இருபது பவுண்டு கட்டணத்தைச் செலுத்தி ட்ரினிட்டி கல்லூரியின் பயிற்சி மாணவராக ராமானுஜனைச் சேர்த்துவிட்டார் ஹார்டி. அடிப்படை தகுதியான பட்டப்படிப்பு ராமானுஜனிடம் இல்லாததால், அதற்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறப்பு அனுமதியை வாங்கினார்.
கல்லூரிக்கு 5 நிமிட நடையில் வந்து சேரும் படியான இடத்தில் ராமானுஜனுக்கு தங்கும் அறை பிடித்துக்கொடுத்தார்.
அங்கே ராமானுஜன் உருவாக்கிய முதல் ஆய்வுக்கட்டுரையை, அவர் சார்பில் லண்டன் கணித கழகக்கூட்டத்தில் சமர்ப்பித்தார். அனைவரும் ஏற்கும் வகையில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதும் கலையைச் சொல்லிக்கொடுத்தார். வெளிநாட்டு கணித இதழ்களைப் படிப்பதற்காக பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் மொழிகளை கற்றுத்தந்தார்.
நண்பராக, குருவாக, வழிகாட்டியாக, சக ஆராய்ச்சியாளராக பலன் எதிர்பாராமல் ஹார்டி செய்து தந்த ஒவ்வொன்றும் பயமின்றி இருக்க ராமானுஜனுக்குப் பக்கத்துணையாக நின்றது.
ஆனாலும் விதியின் கைகளில் விளை யாட்டுப்பிள்ளையாகிவிட்ட ராமானுஜனின் உடல் இங்கிலாந்தின் குளிரை ஏற்கவில்லை. ஒன்றுக்கு மேல் ஒன்றாக இரண்டு சட்டைகள், அதற்கு மேல் கம்பளி ஆடை போட்டால்தான் வெளியில் வரமுடிந்தது. அறைக்குள் நுழைந்தவுடன் குளிர் காயும் அடுப்பை மூட்டி, அதற்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்வார்.
குளிருக்கு அடுத்தபடி சைவ சாப்பாடு பெரும் பிரச்சினையாக இருந்தது. கிடைத்த பொருளில் எல்லாம் அசைவம் கலந்திருக்குமோ என அஞ்சினார். தானே சமைத்து சாப்பிட முயன்றதில் பெரும் நேரம் வீணானது.
இன்னொருபுறம், ட்ரினிட்டி கல்லூரியில் அவர் சேர்ந்த மூன்றே மாதத்தில் முதல் உலகப்போர் மூண்டது. பெரும்பாலான மாணவர்கள் அவரவர் நாடுகளுக்குத் திரும்பினர். ராமானு ஜனும் ஊர் திரும்பிடலாமா? என நினைத்தார். ‘அதெல்லாம் தேவையில்லை; கணிதத்தில் கவனத்தைச் செலுத்துங்கள்’ என ஹார்டி நம்பிக்கை ஊட்டினார்.
அழுத்தம் கொடுத்த காரணிகளுக்கு மத்தியில் அமுதசுரபி போல கணித கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடி இருந்தார் ராமானுஜன். அம்மாவுக்கு செய்து தந்த சத்தியத்தையும் காப்பாற்றினார். ஆங்கிலேய நண்பர்கள் வற்புறுத்தியும் மதுவைத் தொட மறுத்தார்.
அறைக்குள்ளே மரப்பெட்டியில் இஷ்ட தெய்வ படங்களை ஒட்டி வைத்து சுலோகங்கள் சொல்லி வழிபட்டார். எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை; கேளிக்கைகளுக்குச் சென்றதுமில்லை. ஓய்வு நேரத்தில் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதுவதே அவரின் பொழுதுபோக்கு.
நாத்திகரான ஹார்டி, ராமானுஜனின் இறை நம்பிக்கையையும் ஒழுக்கத்தையும் கண்டு வியந்தார். அவருக்கு என்னென்ன அங்கீகாரங்களைப் பெற்றுத்தர முடியுமோ அதையெல்லாம் கிடைத்திடச் செய்வதில் அக்கறை காட்டினார்.
கணித ஆராய்ச்சி கட்டுரையை வைத்து, சிறப்பு வழிமுறையில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அவருக்கு பி.ஏ. பட்டம் வாங்கிக்கொடுத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு எந்த பட்டத்தைப் பெற முடியாமல், இந்தியாவில் அலைந்து, திரிந்தாரோ அதே பட்டம் ஒரேயொரு கட்டுரையில் கிடைத்தது.
சென்னை பல்கலைக்கழகம் ராமானுஜன் குடும்பத்தாருக்கு வழங்கி வந்த தொகை நீட்டிக்கப்பட்டதோடு, ஹார்டியின் முயற்சியில் இங்கிலாந்தில் சில உதவிகளும் அவருக்கு கிடைத்தன. கூடவே ராமானுஜனுக்கு எப்.ஆர்.எஸ்.பட்டத்தையும் வாங்கித்தந்துவிடவேண்டுமென ஹார்டி தீவிரமாக முயன்றார். உலகின் பல நாடுகளில் ஆங்கிலேய ஆட்சி இருந்த நேரத்தில் ‘பெலோ ஆப் ராயல் சொசைட்டி’ என்ற அந்த பட்டம் மிகப் பெரிய அங்கீகாரம்.
பல்வேறு துறைகளில் அதீத நிபுணத்துவம் வாய்ந்தவர்களுக்கே எப். ஆர்.எஸ். பட்டம் வழங்கப்படும். இந்த நேரத்தில் தான் ராமானு ஜனுக்கு உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
அலற வைத்த இருமலும், அடிவயிற்று வலியும் அவ்வப்போது புரட்டி எடுத்த காய்ச்சலும் ராமானுஜனை நிலை குலைய வைத்தன. ஹார்டியும் பார்க்காத மருத்துவம் இல்லை. இங்கிலாந்தில் ராமானுஜனுக்குப் பக்க பலமாக இருந்த கடலூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ராமலிங்கம் என்பவர் அப்போது மிகுந்த கனிவோடு அவரைக் கவனித்துக்கொண்டார்.
உடல் நலமில்லாத நேரத்தில், கும்பகோணத்தில் மனைவி ஜானகியைத் தாயார் கொடுமைப்படுத்துவதாக வந்த செய்தி ராமானுஜனை மனரீதியாகவும் சீர்குலைத்தது. தான் எழுதும் கடிதங்களைக் கூட மனைவியிடம் தாயார் காண்பிக்காமல் இருந்ததை எண்ணி நொறுங்கினார்.
சமைத்துப் போட்டு, தன்னைக் கவனித்து கொள்ள ஜானகியை அனுப்புமாறு எழுதிய கடிதத்திற்கு அம்மா கோமளம் மறுப்பு அனுப்பிவிட்டதை நினைத்து மேலும் வருந்தினார். சில நேரங்களில் பூக்களையும் செடி கொடிகளையும் ஜானகியாக நினைத்து பேசினார். இதைக் கவனித்த சிலர் ராமானுஜனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக பரப்பிவிட்டனர்.
ராமலிங்கம் உதவியோடு மருத்துவர் ஒருவரைப் பார்த்து, தான் முழு மன நலனோடு இருப்பதாக சான்றிதழ் வாங்கி, அதனை எப்போதும் சட்டைப்பையிலேயே வைத்துக்கொண்டார். இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போதுதான், குழப்பத்தின் உச்சியில் ஒரு நாள் திடீரென தற்கொலை முடிவெடுத்து, கேம்ப்ரிட்ஜ் விரைவு ரெயில் பாதையில் தலைவைத்து படுத்தார்.
அதன்பிறகு நடந்தது என்ன?, இளைத்து போய் இந்தியா திரும்பிய ராமானுஜனுக்கு வந்த விநோத நோய் எது? அவரது இறுதிச்சடங்கில் உறவினர்கள் கலந்து கொள்ளாதது ஏன்?
(ரகசியங்கள் தொடரும்)
தேவைக்கு மேல் வேண்டாம்!
ராமானுஜன் இங்கிலாந்தில் பெற்ற சிறப்புகளுக்கு பாராட்டும் விதமாக ட்ரினிட்டி கல்லூரி அவருக்கு வழங்கியதைப் போன்றே மாதம் 250 பவுண்டு (அன்றைய மதிப்பில் ரூ.3750) தொகையை சென்னை பல் கலைக்கழகம் வழங்க முன் வந்தது. ஆனால் அதில் 50 பவுண்டு மட்டும் கும்பகோணத்தில் இருந்த குடும்பத்திற்கு வழங்கச் சொன்ன ராமானுஜன், மீதித் தொகையை ஏழை மாணவர் களின் கல்விக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். வறுமையில் உழன்று பெருமைகளைப் பெற்ற பிறகு, தேவைக்கு மேலாக பணம் வேண்டாம் என்று சொல்வதற்கு எத்தனை பெரிய மனம் வேண்டும்.
வருந்த வைத்த படம்!
இங்கிலாந்து சென்ற ராமானுஜன் சில மாதங்கள் கழித்து தன் புகைப்படம் ஒன்றினை கடிதத்துடன் பெற்றோருக்கு அனுப்பி இருந்தார். மேற்கத்திய பாணியில் உடையணிந்து, குடுமியைக் களைந்து கிராப் வெட்டி, நாற்காலியில் ராமானுஜன் உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்ததும் அவரது அப்பா, அம்மாவும் கலங்கினர். மகன் ஆச்சாரமிழந்து இப்படி ஆகிவிட்டானே என வருந்தினர். ‘இதனால் தானே வெளிநாடு செல்ல வேண்டாம் என்றோம்; அவன் கேட்கவில்லையே’ என்று புலம்பினார்கள்.
இந்தப் படத்தையும் சேர்த்து ராமானுஜனின் உண்மையான புகைப்படங்கள் 4 மட்டுமே இப்போது வரை உள்ளன. இங்கிலாந்தில் படித்த மற்ற இந்திய மாணவர்களுடன் எடுத்த படம், கேம்ப்ரிட்ஜில் பட்டம் வாங்கியபோது எடுத்த படம், கடைசியாக நோய்வாய்ப்பட்டு இந்தியா திரும்பும் பயணப்பத்திரத்திற்காக எடுத்த படம் ஆகியவையே மற்ற 3 புகைப்படங்களாகும்.
இதில் தலை சாய்ந்தது போல இருக்கும் கடைசி படமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

Next Story