பன்னியாண்டி சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி உதவி கலெக்டரிடம் மனு
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லிபாபு, தர்மபுரி உதவிகலெக்டர் ராமமூர்த்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி கோட்டத்தில் பன்னியாண்டி சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் குழ
தர்மபுரி
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லிபாபு, தர்மபுரி உதவிகலெக்டர் ராமமூர்த்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி கோட்டத்தில் பன்னியாண்டி சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்க உரிய சாதி சான்றிதழ் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். சாதி சான்றிதழ் கிடைக்காததால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை உள்பட அரசின் பல்வேறு திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. 1976–ம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கான வகைப்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் பட்டியலில் பன்னியாண்டி சமூகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2008–ம்ஆண்டின் தொடக்கத்தில் பன்னியாண்டி சமூகத்தினருக்கு எஸ்.சி. சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தர்மபுரி கோட்டத்தில் பல்வேறு இடங்களில் சாதி சான்றிதழ் கிடைக்காமல் இந்த சமூகத்தினர் சிரமப்படுகிறார்கள். எனவே பன்னியாண்டிகள் சமூகத்தினருக்கு எஸ்.சி. சாதிசான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.