கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் கடைபிடிப்பு சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் கடைபிடிப்பு சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 25 Dec 2016 4:15 AM IST (Updated: 24 Dec 2016 6:41 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர்.நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். நினைவு நாள் மறைந்த தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று க

கிருஷ்ணகிரி,

எம்.ஜி.ஆர்.நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆர். நினைவு நாள்

மறைந்த தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆரின் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பெத்ததாளப்பள்ளியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் நகர செயலாளர் கேசவன், கிருஷ்ணகிரி வீட்டு வசதி சங்க தலைவர் சரவணன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வம், மாவட்ட பேரவை துணை செயலாளர் ராஜேந்திரன், தொகுதி செயலாளர் காத்தவராயன், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பனப்பள்ளி, பர்கூர்

வேப்பனப்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காந்தி சிலை அருகில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முனியப்பன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ராமு மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பர்கூர் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாதையன், பால்வள தலைவர் தென்னரசு, பர்கூர் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜா, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமால், முன்னாள் நகர செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதாகார்த்திக், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியையொட்டி காவேரிப்பட்டணத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருபானந்தம், எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றிய செயலாளர் காவேரி, மாவட்ட பிரதிநிதிகள் பழனியம்மாள் சேட்டு, செல்வராஜ், மாவட்ட கேபிள் டி.வி. துணைத்தலைவர் சின்னசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் மாணிக்கம், விமலா சுப்பிரமணியம், ஊராட்சி செயலாளர்கள் பழனிசாமி, தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story