வேலூரில் 60 ஆயிரம் காசநோய் வில்லைகள் ரூ.3 லட்சத்திற்கு விற்க இலக்கு
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர சுகாதார ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ரூ.5 மதிப்புள்ள 67–வது காசநோய் வில்லைகளை கலெக்டர் ராமன் வெளியிட்டார். அரசு மருத்துவமனைகளின் சார்பாக சுகாதார பணிகளின் இண
வேலூர்,
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர சுகாதார ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ரூ.5 மதிப்புள்ள 67–வது காசநோய் வில்லைகளை கலெக்டர் ராமன் வெளியிட்டார். அரசு மருத்துவமனைகளின் சார்பாக சுகாதார பணிகளின் இணை இயக்குனர் கலிவரதன் பெற்று கொண்டார். வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக வேலூர் துணை இயக்குனர் சுரேஷ், திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பாக திருப்பத்தூர் துணை இயக்குனர் தேவபார்த்தசாரதி ஆகியோர் பெற்று கொண்டனர்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காசநோய் தடுப்பு பணிகளின் துணை இயக்குனர் ராஜாசிவானந்தம் பேசுகையில், ‘தமிழ்நாடு மாநில காசநோய் தடுப்புக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டங்களில் காசநோய் வில்லைகள் விற்பனைக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்திற்கு 60 ஆயிரம் காசநோய் வில்லைகள் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார்.