காட்பாடியில் மண் கடத்திய லாரி பறிமுதல்
காட்பாடி பள்ளிக்குப்பத்தில் லாரியில் மண் கடத்துவதாக காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மற்றும் வருவாய் ஆய்வாளர் சந்தோஷ், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தஸ்ரீ ஆகியோர் பள்ளிகுப்பத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக
காட்பாடி
காட்பாடி பள்ளிக்குப்பத்தில் லாரியில் மண் கடத்துவதாக காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மற்றும் வருவாய் ஆய்வாளர் சந்தோஷ், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தஸ்ரீ ஆகியோர் பள்ளிகுப்பத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் அனுமதியில்லாமல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மண்ணுடன் லாரியை தாசில்தார் ஜெகதீஸ்வரன் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
Next Story