தண்டராம்பட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம்
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிபதி ராஜா தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி சுவர்ணம் நடராஜன், நீதிபதி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சமூகத்தில் ஏற்படு
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிபதி ராஜா தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி சுவர்ணம் நடராஜன், நீதிபதி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது? மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறுவது, குடும்ப பிரச்சினைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது, பணப்பிரச்சினைகளுக்கு எப்படி நீதிமன்றத்தை அணுகுவது போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் திருவண்ணாமலை புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகேந்திரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story