எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு


எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2016 4:30 AM IST (Updated: 24 Dec 2016 10:10 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர், எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் உருவப் படத்துக்கு மலர்தூவியும் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள். எம்.ஜி.ஆர். நினைவு தினம்

விருதுநகர்,

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் உருவப் படத்துக்கு மலர்தூவியும் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

எம்.ஜி.ஆர். நினைவு தினம்

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்தனர். உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

விருதுநகரில் சாத்தூர் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகரச் செயலாளர் முகமதுநயினார், முன்னாள் நகரசபை தலைவர் சாந்தி, நகரசபை முன்னாள் துணைத் தலைவர் மாரியப்பன், முன்னாள் கவுன்சிலர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் புல்லலக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிளை செயலாளர் வெற்றிவேல்முத்துராமலிங்கம், தலைவர் முருகேசன், பொருளாளர் வேல்சாமி, சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சுழியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நினைவு தின நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சித்திக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முனியாண்டி, மகளிர் அணி தனபாக்கியலட்சுமி, அழகு, பாலமுருகன், தங்கதாரகை மலைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தூர்

சாத்தூர் முக்குராந்தல் அருகே சாத்தூர் நகர், ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகரச் செயலாளர் வாசன் ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை முன்னாள் நகரசபை தலைவர் டெய்சிராணி, முன்னாள் யூனியன் தலைவர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது 5 தொண்டர்கள் மொட்டைபோட்டுக்கொண்டனர்.

வெங்கடாசலபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்ச்செல்வன், திருவேங்கடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். படந்தால் தென்றல் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, சாமுவேல், திருவேங்கடசாமி, கனகராஜ், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டை

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் முத்துசாமிபுரம், வெம்பக்கோட்டை, செவல்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட கிராமங்களில் எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் ராமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், கிளை செயலாளர் சுந்தர்ராஜ், அசோக்குமார், அய்யணசாமி, சீனிவாசன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழசெல்லையாபுரத்தில் ஊராட்சி செயலாளர் சுந்தரமூர்த்தி, கிளை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலும் தாயில்பட்டியில் ஊராட்சி செயலாளர் புதுராஜ், கூட்டுறவு சங்க தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையிலும் குகன்பாறையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கே.வி.கே. ராஜ் தலைமையிலும் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

திருத்தங்கல்

திருத்தங்கல் அண்ணா சிலை அருகே எம்.ஜி.ஆர். உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. திருத்தங்கல் நகரச் செயலாளர் பொன் சக்திவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் நகரச் செயலாளர் சரவண குமார், முன்னாள் நகரசபை தலைவர் தனலட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, வசந்தகுமார், முருகேசன், மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் கணேசன், வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராமணபிரியன், அன்புசெல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவர்குளம் ஹவுசிங் போர்டு பஸ் ஸ்டாப்பில் சிவகாசி பால்வளதலைவர் லயன் மாரிமுத்து, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் தங்கபாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணஅம்மாள் ஆகியோர் எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகே சாமிக்காளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சித்துராஜபுரத்தில் லெனின் கிருஷ்ண மூர்த்தி, பாலாஜி, வசந்தஅழகர்சாமி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்தனர். இதேபோன்று தேவர் சிலை, இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி பூங்கா அருகே நகர அவைத் தலைவர் முருகேசன், பேரவை செயலாளர் பிலிப் வாசு, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், வெற்றிசெல்வன், பள்ளபட்டி ஊராட்சி செயலாளர் நாராயணன், ராஜேந்திரன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணாகாலனி அருகே மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கந்தசாமி, சந்தனமாரிபாண்டியன் ஆகியோர் தலைமையிலும் ஆலமரத்துபட்டியில் கிளை செயலாளர் ராமகிருஷ்ணன், தங்கவேல் ஆகியோர் தலைமையிலும் எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணனும் மரியாதை செலுத்தினார்.

வேண்டுராயபுரம்

வேண்டுராயபுரத்தில் சிவகாசி முன்னாள் யூனியன் தலைவர் சுப்பிரமணியன், நாரணம்மாள் ஆகியோர் தலைமையிலும் செங்கமலநாச்சியர்புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளஸ்வரி பாண்டியன், ஊராட்சி செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலும் என்.ஜி.ஓ. காலனியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், கிளை செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தலைமையிலும் எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிலைக்கு மாலை

ராஜபாளையத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணிய ராஜா தலைமையில் நகரச் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சியாம் ராஜா, தொகுதி செயலாளர் வனராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, முன்னாள் யூனியன் தலைவர் பொன்னுதாய், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகையாபாண்டியன், பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story