அய்யனார்கோவில் அணை விரைவில் தூர் வாரப்படும் நீதிபதி எம்.எல்.ஏ. தகவல்
எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள அய்யனார்கோவில் அணை தூர் வாரப்பட்டு, அதில் மழைநீரை தேக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எம்.எல்.ஏ. தெரிவித்தார். சாலைப் பணிகள் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓண
உசிலம்பட்டி,
எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள அய்யனார்கோவில் அணை தூர் வாரப்பட்டு, அதில் மழைநீரை தேக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
சாலைப் பணிகள்சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓணாப்பட்டியிலிருந்து ஒத்தப்பாறைப்பட்டி வரையில் ரூ.12½ லட்சம் மதிப்பிலும், பாலார்பட்டியிலிருந்து வண்ணான்குளம் வரை ரூ.40 லட்சம் மதிப்பிலும், அத்திபட்டியிலிருந்து செம்பட்டி வரையில் ரூ.16½ லட்சம் மதிப்பிலும், எம்.எஸ்.புரத்திலிருந்து அய்யனார்கோவில் அணை வரை ரூ.55 லட்சம் மதிப்பிலும் தார் சாலைகள் அமைக்கும் பணிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
மேலும் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வண்ணான்குளத்திலிருந்து தாடையம்பட்டி வரை ரூ.44 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமா.ராஜா, பொதுக்குழு உறுப்பினர் துரை.தனராஜன், பெருங்காமநல்லு£ர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் லட்சபிரபு, முன்னாள் ஒன்றியத் தலைவர்கள் பால்பாண்டி, முனியம்மாள் பிச்சைமணி, எழுமலை நகர் செயலாளர் வாசிமலை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏட்டால் பழனி, ஒன்றிய உதவிப் பொறியாளர்கள் வினோத்குமார், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரேஷன்கடை
ஆய்வுஅதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. அத்திபட்டி ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும், பொருட்களின் எடை அளவு சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஒரே ரேஷன்கடையில் பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் பெரும் சிரமம் ஏற்படும் நிலையில், அந்ததந்த கிராமங்களில் ரேஷன் கடைகள் அமைத்தால் பொதுமக்கள் பயனடைவார்கள், எனவே புதிய ரேஷன் கடைகள் கட்டித்தர வேண்டும் என்று கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கையா கோரிக்கை வைத்தார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தூர் வார நடவடிக்கைஅதன் பின்னர் எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள அய்யனார்கோவில் அணையை பார்வையிட்ட எம்.எல்.ஏ., அங்குள்ள முட்செடிகள் அடர்ந்த புதரை அகற்றி, அணையை தூர்வாரி மழை காலங்களில் வரும் மழைநீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் அய்யனார்கோவிலை சுற்றி உள்ள தோட்டங்களில் தங்கி வேலை செய்யும் விவசாயிகள் தங்களுக்கு மின்சார வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பேசி, விவசாயிகளுக்கு மின்சார வசதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் முதல் கட்டமாக இந்த அணையின் அருகில் உள்ள அய்யனார்கோவிலுக்கு சூரிய ஒளி மின்சக்தி விளக்குகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.