எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
x
தினத்தந்தி 25 Dec 2016 3:45 AM IST (Updated: 24 Dec 2016 11:05 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவனியாபுரம் அவனியாபுரத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி,

அவனியாபுரம்,

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அவனியாபுரம்

அவனியாபுரத்தில் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு அவனியாபுரம் முன்னாள் கவுன்சிலர் முனியாண்டி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் கருத்தமுத்து, முருகேசன், எம்.ஜி.ஆர். மன்ற பகுதி செயலாளர்கள் கண்ணுச்சாமி, சித்தர், சாமி, நிர்வாகிகள் முருகேசன், கல்லுமடை முருகன், ராஜாராம், கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ரமேஷ் தலைமையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஒன்றிய துணைச்செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு போஸ் மாலை அணிவித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் தர்மராஜா, முன்னாள் பேரவை மாவட்ட செயலாளர்கள் பாரி, மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலமுருகன், கருத்தகண்ணன், தனிக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழழகன், ஆண்டிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ரவி, தொழிற்சங்கம் முருகன், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அருகே உள்ள கோவிலூரில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லனை ரவிச்சந்திரன் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் சுந்தரராகவன், ஜெயபால், மதிவாணன், தொழில்நுட்ப பிரிவு உமேஷ் சந்தர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் திவ்யா கோடீஸ்வரன், தமிழ்செல்வி, பொறியாளர் மதன், நிர்வாகிகள் மதலையப்பன், மாணிக்கம், பாலகிருஷ்ணன், லிங்கப்பன், சுரேஷ், நடராஜன், ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story