தஞ்சையில், நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., தி.க.வினர் மாலை அணிவிப்பு


தஞ்சையில், நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க., தி.க.வினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2016 4:30 AM IST (Updated: 24 Dec 2016 11:09 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ஆபிரகாம்பண்டித

தஞ்சாவூர்,

தஞ்சையில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் இருந்து நேற்றுகாலை அமைதி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை வந்தடைந்தது. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசு, மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் ஆகியோர் முன்னிலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் அமுதாரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் விருத்தாசலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்வேலன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மகளிரணியினர், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அண்ணா தொழிற்சங்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கரந்தையில் உள்ள அரசு பணிமனையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு காவேரி சிறப்பு அங்காடி துணைத் தலைவர் வேங்கை கணேசன், மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், ராஜகோபால், ராஜேந்திரன், மதன், மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மேலவீதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநகராட்சி முன்னாள் கொறடா சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், பிரதிநிதிகள் சேகர், கிட்டு, சந்துரு, துரை, ராஜாராம், கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திராவிடர் கழகம்

தஞ்சை ஒன்றிய, மாநகர திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுச் செயலாளர் ஜெயகுமார், மண்டல செயலாளர் ஜெயராமன், மகளிரணி மாநில செயலாளர் கலைச்செல்வி, மாநகர தலைவர் ஸ்டாலின், ஒன்றிய தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், மாநகர செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story