நாகையில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்


நாகையில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 24 Dec 2016 11:20 PM IST (Updated: 24 Dec 2016 11:20 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயல்வீரர்கள் கூட்டம் நாகை காடம்பாடியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நாகை மாவட்ட ச

நாகப்பட்டினம்,

நாகையில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

நாகை காடம்பாடியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நாகை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்து கீழவெண்மணி கிராமத்தில் நடைபெறும் வீரவணக்கநாள் நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது. நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாத அவலநிலையை போக்கி உடனடியாக போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும் சம்பா சாகுபடி செய்த பயிர்கள் கருகி போனதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினைக்கு

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் மீனவர்கள் நலன் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகையில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகள், குளங்களை கண்டறிந்து தூர்வாரி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ஜீவாபாரதி நன்றி கூறினார்.


Next Story