ஏரலில் வாழைத்தார் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் சமத்துவ மக்கள் கழகம் தீர்மானம்


ஏரலில் வாழைத்தார் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் சமத்துவ மக்கள் கழகம் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Dec 2016 1:30 AM IST (Updated: 24 Dec 2016 11:57 PM IST)
t-max-icont-min-icon

ஏரலில் வாழைத்தார் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆலோசனை கூட்டம் ஏரல் நட்டார் அம்மன் திருமண மண்டபத்தில் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்

ஏரல்,

ஏரலில் வாழைத்தார் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

ஏரல் நட்டார் அம்மன் திருமண மண்டபத்தில் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், அமைப்பு செயலாளர் அர்ச்சுணன், வக்கீல் அணி அந்தோணி பிச்சை, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகுட்டி, தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் இருதயகுமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழைத்தார்

கூட்டத்தில், மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது, மழையின்றி கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களையும், மாணவர்களின் கல்விக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 300 இடங்களில் சமத்துவ மக்கள் கழக கொடியேற்றி, தெருமுனை கூட்டங்கள் நடத்த வேண்டும்.

ஏரலில் வாழைத்தார் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். நெல்லை– திருச்செந்தூர் சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ்மூர்த்தி நன்றி கூறினார்.


Next Story