நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். எம்.ஜி.ஆர்.நினைவு தினம் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சில
நெல்லை,
நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர்.நினைவு தினம்தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் மேயர் புவனேசுவரி, முன்னாள் துணை மேயர் கணேசன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, இளைஞர் பாசறை முன்னாள் செயலாளர் அரிகர சிவசங்கர், நெல்லை டவுன் கூட்டுறவு வங்கி கிளை தலைவர் பால்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க.–தே.மு.தி.க.நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் நிஜாம் தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவருடன், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கட்சி நிர்வாகிகள் கல்லத்தியான், அரசு அமல்ராஜ், மணி உள்பட பலர் வந்து இருந்தனர். நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நெல்லை மாநகர் பகுதியில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது, அந்த படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.