நபார்டு வங்கி மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.9,566 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்
நபார்டு வங்கி மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.9 ஆயிரத்து 566 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். ரூ.9,566 கோடி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மா
ஈரோடு
நபார்டு வங்கி மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.9 ஆயிரத்து 566 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ரூ.9,566 கோடிஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் 2017–2018–ம் நிதி ஆண்டில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.9 ஆயிரத்து 566 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாயத்துக்கு ரூ.5 ஆயிரத்து 879 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பயிர்கடனாக ரூ.3 ஆயிரத்து 430 கோடியும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மற்ற தொழில்களுக்கு முதலீட்டு கடனாக ரூ.2 ஆயிரத்து 447 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.1,854 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.1,831 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வுஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து அப்பகுதியில் உள்ள மக்களிடையே வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது குறித்தும், ஏ.டி.எம். கார்டு பெறுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
மேலும் செல்போன் மூலம் வங்கி கணக்கில் தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து பணபரிவர்த்தனை எவ்வாறு செய்வது என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.
திட்ட அறிக்கைகூட்டத்தில் 2017–2018–ம் ஆண்டிற்கான நபார்டு வங்கியின் ரூ.9 ஆயிரத்து 566 கோடி கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டார். அதை கனரா வங்கி உதவி பொது மேலாளர் எஸ்.சோலை பெற்றுக்கொண்டார்.
இதில் நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் அபுவராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராதாமணி, ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் சரவணன், ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், இணை இயக்குநர் (வேளாண்மை) சுப்பிரமணியம், மகளிர் திட்ட அலுவலர் பழனிகுமார், கிராம சுய வேலைவாய்ப்பு திட்ட இயக்குனர் சுதர்சனன் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டார்கள்.