சாமிதோப்பு அருகே ரெயிலில் அடிபட்டு 40 ஆடுகள் பலி தண்டவாள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது பரிதாபம்
சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைக்குளத்தில் தண்டவாள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது ரெயிலில் அடிபட்டு 40 ஆடுகள் பலியானது. இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– ரெயில் மோதியது குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைக்குளத்தில் ரெயில்வே கிராச
தென்தாமரைகுளம்
சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைக்குளத்தில் தண்டவாள பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது ரெயிலில் அடிபட்டு 40 ஆடுகள் பலியானது.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
ரெயில் மோதியதுகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வடக்கு தாமரைக்குளத்தில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த ரெயில்வே கிராசிங் பகுதியில் வயல்கள், வாழைத் தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. இதனால் ஆடு, மாடுகள் இந்த பகுதியில் மேய்ச்சலுக்காக வருவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு வடக்கு தாமரைக்குளம் ரெயில்வே கிராசிங் கிழக்கு பகுதியில் தண்டவாளத்தின் அருகில் நூற்றுக்கணக்கான ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்த ஆடுகள் தண்டவாளத்தின் நடுப்பகுதிக்கு வந்தது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த ஆண்டிவிளையை சேர்ந்த ஊர்காவல்படையில் பணியாற்றும் சிவராஜன் என்பவர் ஓடி வந்து ஆடுகளை சத்தம் போட்டு விரட்ட முயற்சித்தார். அதில் பாதி ஆடுகள் சென்று விட்டன. மற்ற ஆடுகள் மீது ரெயில் மோதியபடி சென்றது.
ஆடுகள் பலிஇதில் அதே இடத்திலேயே துடிதுடித்து 40 ஆடுகள் பலியானது. 15 ஆடுகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. இறந்த ஆடுகளின் உடல்கள் தண்டவாள பகுதியில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதுபற்றி ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஆடுகளை மேய்ப்பவர், தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் ஆடுகளை அங்குள்ள ஒரு தோப்புக்குள் விட்டு சென்றதாகவும், அந்த ஆடுகள் நேற்று மேய்ச்சலுக்காக தானாக அங்கிருந்து வெளியேறி அந்த பகுதி தண்டவாளம் அருகில் மேய்ந்து கொண்டிருந்த போது ரெயில் மோதி பலியானது தெரியவந்தது. ரெயில் மோதி ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.