புகார்தாரருக்கு தமிழில் எஸ்.எம்.எஸ். மூலம் பதில் அனுப்ப ஏற்பாடு கூடுதல் டி.ஜி.பி. தகவல்


புகார்தாரருக்கு தமிழில் எஸ்.எம்.எஸ். மூலம் பதில் அனுப்ப ஏற்பாடு கூடுதல் டி.ஜி.பி. தகவல்
x
தினத்தந்தி 25 Dec 2016 3:12 AM IST (Updated: 25 Dec 2016 3:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழக போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீதான நடவடிக்கை தொடர்பாக முடிவுகளை அறியும் வகையில் கடந்த 17-ந்தேதி முதல் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

சென்னை,

தமிழக போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீதான நடவடிக்கை தொடர்பாக முடிவுகளை அறியும் வகையில் கடந்த 17-ந்தேதி முதல் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதாவது கொடுக்கப்படும் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட புகார்தாரரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வந்தது. இதன்மூலம் தாங்கள் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? சரியான ஆதாரம் இல்லை என்பதால் மறுக்கப்பட்டுவிட்டதா? என்பதை புகார்தாரர் அறிந்துகொள்ள முடிந்தது. இந்த எஸ்.எம்.எஸ். ஆங்கிலத்திலேயே அனுப்பப்பட்டு வந்தது. இந்தநிலையில் பொதுமக்கள் வசதிக்காக தற்போது ஆங்கிலத்தில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். விரைவில் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு அனுப்பப்பட உள்ளது. அந்தவகையில் இனி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Next Story