அரசியல் கலாசாரம் மாறுகிறது: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல் முறையாக காங்கிரஸ் அஞ்சலி


அரசியல் கலாசாரம் மாறுகிறது: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல் முறையாக காங்கிரஸ் அஞ்சலி
x
தினத்தந்தி 25 Dec 2016 3:16 AM IST (Updated: 25 Dec 2016 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் வழிதோன்றலாக வந்த தலைவர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் அன்று மரியாதை செலுத்துவது வழக்கம்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் வழிதோன்றலாக வந்த தலைவர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் அன்று மரியாதை செலுத்துவது வழக்கம்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோருக்கும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவார்கள்.

காமராஜர் எல்லோராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்கள் இதுவரை அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு மரியாதை செலுத்தியதே இல்லை.

ஆனால் வரலாற்றில் முதல் முறையாக இந்த கலாசாரத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்துக்கு திருநாவுக்கரசர் நேற்று வந்து அஞ்சலி செலுத்திய நிகழ்வை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

திருநாவுக்கரசர் அ.தி.மு.க.வில் இருந்தவர் என்பதால் எம்.ஜி.ஆருக்கு அவர் அஞ்சலி செலுத்தியதில் ஆச்சரியம் இல்லை என்றாலும், அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தியது அரசியலில் புதிய நிகழ்வாகவே கருதப்படுகிறது. 

Next Story