கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 பேர் கைது 3 பேருக்கு வலைவீச்சு
கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
கொள்ளையடிக்க திட்டமிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளையடிக்க திட்டம்
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பாரதி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது உருட்டுக்கட்டை, இரும்பு கம்பிகளுடன் 5 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை துரத்தி சென்று 2 பேரை மட்டும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் போட்டிருந்தது தெரியவந்தது.
கைது
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சத்யா என்கிற செங்குட்டுவன் (வயது 36) மற்றும் விஜய் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய பெரியகுப்பம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சரவணன், கற்குழாய் தெருவை சேர்ந்த பாலாஜி, திருவள்ளூரை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story