திருத்தணியில் ஓட்டுனர் உரிமம், ஆவணங்கள் இன்றி இயங்கிய 13 ஆட்டோக்கள் சிக்கின


திருத்தணியில் ஓட்டுனர் உரிமம், ஆவணங்கள் இன்றி இயங்கிய 13 ஆட்டோக்கள் சிக்கின
x
தினத்தந்தி 25 Dec 2016 3:29 AM IST (Updated: 25 Dec 2016 3:29 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையொட்டி வட்டார போக்கு

திருத்தணி,

திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையொட்டி வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர்் திருத்தணியில் பல்வேறு இடங்களில் திடீர் என ஆட்டோக்களை ஆய்வு செய்தனர்.

திருத்தணி முருகன் மலைக்கோவில் பகுதியில் இருந்த ஆட்டோக்களை ஆய்வு செய்த போது அதில் 6 ஆட்டோக்களுக்கு ஆவணங்கள் இல்லை என்பதும், 7 ஆட்டோ டிரைவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் 13 ஆட்டோக்களை கைப்பற்றி ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதித்தார். 

Next Story