போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் மோதி 5 பேர் காயம் கிராம மக்கள் சாலை மறியல்
போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சைக்கிள் மீது மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர். போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சைக்கிள் மீது மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர். போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் டில்லிபாபு. இவர் நேற்று மாலை தச்சூர் கூட்டுசாலையில் இருந்து காரில் கும்மிடிப்பூண்டி நோக்கி தனது குடும்பத்தினரோடு வந்து கொண்டிருந்தார். ஜீப்பை இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவே ஓட்டிவந்தார்.
பெருவாயல் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்றுகொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள் மீது மோதியது.
5 பேர் காயம்
இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற புதுவாயல் கிராமத்தைச் சேர்ந்த தன்சிங்(வயது 36), அவரது மகள் நிஷாலினி(4), அவரது சகோதரரின் மகள் பிரியதர்சினி (11) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற சீனிவாசன்(52) என்பவரும், சைக்கிளில் சென்ற பன்னீர்தாஸ்(41) என்பவரும் லேசான காயம் அடைந்தனர்.
இதில் தன்சிங், நிஷாலினி மற்றும் பிரியதர்சினி ஆகிய 3 பேரும் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து அவர்களை மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும்படி டாக்டர்கள் கூறினர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதை கண்டித்தும், இன்ஸ்பெக்டர் டில்லிபாபுவை கண்டித்தும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த சீனிவாசன், பன்னீர்தாஸ் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
சாலை மறியல்
இதற்கிடையில் விபத்து நடந்த பெருவாயல் கிராமத்தில் சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சுமார் 200 பேர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கவேல், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து நடந்தபோது இன்ஸ்பெக்டர் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர். இதனால் அவரை சோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு துணை சூப்பிரண்டு அழைத்துச் சென்றார்.

Next Story