கிறிஸ்துமஸ் பண்டிகை: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வாழ்த்து


கிறிஸ்துமஸ் பண்டிகை: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 25 Dec 2016 4:15 AM IST (Updated: 25 Dec 2016 3:35 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அனைவரிடத்திலும் அன்பும்

புதுச்சேரி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அனைவரிடத்திலும் அன்பும், கருணையும், மகிழ்ச்சியும், நிலவ வேண்டும். அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர் இயேசுபிரான். மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும், அன்பும்–பாசமும் கொண்டவர் இயேசு பெருமான். அவரது மனிதநேய அமுத மொழிகள் நமக்கு இன்றியமையாதது.

எல்லை இல்லாத கருணைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இலக்கணமாக திகழ்ந்த இயேசு பெருமான் அவதரித்த தினமான இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களான புதுச்சேரி கிறிஸ்தவ பெருமக்களுக்கு என்னுடைய சார்பிலும், எனது இயக்கத்தின் சார்பிலும் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Next Story