தன்னம்பிக் கை சகலகலாவல்லவர்
உடல்ரீதியான குறைபாட்டை பெரிதாக கருதிக்கொண்டு மனம் சோர்ந்து போயிருப்பவர்களுக்கெல்லாம் மருந்தாக இருக்கிறார், ஹரி. இவரது கைகள் இரண்டும் குறைபாடு கொண்டவை. ஆனால் மனது முழுக்க தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது. இவர் கேரளாவில் மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர்.

பொதுவாக நம்பூதிரி சமூகத்தை சேர்ந்தவர்கள் தெய்வீக பணிகளிலே அதிகம் ஈடுபடுவார்கள். ஆனால் ஹரியின் தந்தை ஈஸ்வரன் நம்பூதிரிக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதனால் திருவிதாங்கூர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். காலமாற்றத்தால் விரைவிலே அதில் இருந்து விடைபெற வேண்டியதிருந்திருக்கிறது. ‘இனி என்ன செய்யப் போகிறாய்? வழக்கம் போல் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் பூசாரியாக வேலை பார்..’ என்று உறவினர்கள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், ஊரில் இருந்து வெளியேறி, மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவில் ராணுவ வீரராகிவிட்டார். அதில் சேவை செய்துகொண்டிருந்த போதுதான் ஆயுர்வேத டாக்டரான சுபத்ராதேவியை திருமணம் செய்தார். பின்பு அவர் ராணுவத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, கேரளாவில் மனைவியோடு வசிக்கத் தொடங்கினார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான ஹரி பிறந்தார்.
தாயார் சுபத்ராதேவி அந்த காலத்திலே சமூகத்திற்கு முன்னோடியாக திகழ்ந்த பெண்மணி. அன்றைய சூழலில் அவர் டாக்டருக்கு படித்ததே அபூர்வமான விஷயம். மேலும் அவர் தனது கிராமத்து வீட்டில் இருந்து, நகரத்தில் இருக்கும் மருத்துவ
மனைக்கு தினமும் சைக்கிளில் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார்.
அம்மா சைக்கிளில் செல்வதை பார்த்த ஹரிக்கு, தானும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இரண்டு கைகளும் இல்லாத மகனால் எப்படி சைக்கிள் ஓட்டமுடியும் என்று தாயார் கலங்கினார். ஆனால் தந்தையோ, ‘முயற்சித்து பார்.. முடிந்தால் ஓட்டு.. சும்மாவே இருப்பதற்கு பதில் முயற்சிப்பது நல்லது’ என்றிருக்கிறார்.
‘‘என் தந்தை சொன்னதை நான் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். எப்பாடுபட்டாவது சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். பலதடவை சைக்கிளில் இருந்து கீழே விழுந்தேன். உடலில் பலமாக அடிபட்டது. ஒவ்வொரு முறை கீழே விழுந்து அடிபடும்போதும், நான் லட்சியத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கருதினேன். முயற்சியை கைவிட்டுவிடுமாறு பெற்றோரும் கூறவில்லை. கடும் முயற்சிகளுக்கு பின்னால் ஒருவழியாக நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். எனது வாழ்க்கை வெற்றிப்படிக்கட்டில் நான் எடுத்துவைத்த முதல் அடி அது..’’ என்கிறார், ஹரி.
சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டதும் அவரது வாழ்க்கைச் சக்கரம் வேகமாக சுழலத் தொடங்கியிருக்கிறது. நன்றாக படிக்கவேண்டும். வேலைக்கு செல்ல வேண்டும். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்த லட்சியங்களை நோக்கி பயணப்படத் தொடங்கினார். ஆனால் அவை எல்லாம் எளிதான காரியம் இல்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.
‘‘பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பின்பு தொழில்நுட்ப கல்வியை கற்றுக் கொள்ள விரும்பினேன். ஐ.டி.ஐ. சேர ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு விண்ணப்பித்ததும் முதலில் எனக்கு அட்மிஷன் தர மறுத்தார்கள். ‘வரையவேண்டியிருக்கும், கைகளால் நிறைய வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். அது உங்களால் முடியாது’ என்று கூறி நிராகரித்தார்கள். ஆனால் நான் எனக்கு இருக்கும் கையை வைத்துக்கொண்டு, வரைந்தேன். வேகமாக சில வேலைகளையும் செய்து காண்பித்தேன். அதன் பிறகுதான் என்னை ஐ.டி.ஐ.யில் சேர்த்துக் கொண்டார்கள். படித்து, முதல் வகுப்பில் தேறினேன்’’ என்கிறார்.
பின்பு குடிநீர் வாரியத்தில் வேலைகிடைத்தது. வேலையில் அவர் சைக்கிளில் சுற்றி, களப்பணியாற்றவேண்டிய திருந்தது. ஆனாலும் சோர்ந்துபோகவில்லை. ஆர்வத்தோடு அதை செய்திருக்கிறார்.
சைக்கிளில் வெகுதூரம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டபோது, ‘பைக்’ ஓட்ட கற்றுக்கொள்ளலாமே என்ற எண்ணம் ஹரிக்கு உருவாகியிருக்கிறது.
‘‘பைக் ஓட்ட கற்றுக்கொள்ள நான் விரும்பியதும் சிலரிடம் சொன்னேன். அவர்கள், ‘உனக்கு எதுக்கு இப்படிப்பட்ட விசித்திரமான ஆசை’ என்று கிண்டல் செய்தார்கள். அவர்கள் எல்லாம் வியக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நான் பைக் ஓட்ட பயிற்சி பெற்றேன். கற்றுக்கொள்ளவும் செய்தேன். ஆனால் ஓட்டுவதற்கு கஷ்டப்பட்டதைவிட, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். கூடுதலாக இரண்டு சக்கரங்களை இணைத்தால்தான் லைசென்ஸ் தர முடியும் என்றார்கள். நான், ‘அதற்கு பதிலாக ஆட்டோவை வாடகைக்கு பிடித்து அதிலே செல்லலாமே!’ என்றேன். பல நாட்கள் வற்புறுத்தலுக்கு பிறகு, நான் மற்றவர்களைவிட நன்றாக பைக் ஓட்டி காண்பித்த பிறகே எனக்கு உரிமம் தந்தார்கள்’’ என்கிறார்.
20 வருடங்களாக ஹரி தினமும் பைக் பயணம் செய்துகொண்டிருக்கிறார். அவரது வலது கையைவிட, இடது கை சற்று நீளம். அதனால் ஆக்சிலேட்டரை இடது கையால் இயக்கும் விதத்தில் தனது பைக்கில் மாற்றம் செய்திருக்கிறார். அதோடுவிடவில்லை. கார் ஓட்டவும் கற்றுக்கொண்டிருக்கிறார். சரியாக கார் ஓட்ட கற்றுக்கொள்ளும் முன்பே கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு கார் ஓட்டிச்சென்றிருக்கிறார். திரும்பி வரும்போது நன்றாக ஓட்ட பழகிவிட்டதாக சொல்கிறார்.
இந்த மாதிரியான வாழ்க்கை சாகசங்களில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எல்லோரையும் போல் அவருக்கும் மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கத்தான் செய்திருக்கிறது. அதற்கு அவர் இசையை மருந்தாக்கியிருக்கிறார். சிறுவயதிலே இசை மீது ஆர்வம் கொண்ட அவர், பிரபலமான குருக்களிடம் வாய்ப்பாட்டு, மிருதங்கம் போன்றவைகளை கற்றிருக்கிறார். பின்பு இவரே ஒரு இசைக்குழுவையும் உருவாக்கி கோவில்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கச்சேரியும் நடத்தி வருகிறார். குருவாயூர் கோவிலிலும், கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்திலும் இவர் கச்சேரிகள் அவ்வப்போது நடக்கின்றன.
‘‘வாழ்க்கை என்பது மகிழ்ச்சியானது’’ என்று கூறும் ஹரியை சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம் இருக்கிறது. இவரால் அந்த கூட்டமே கலகலப்பாகி விடுகிறது.
ஹரியின் மனைவி பெயர் பாக்யலெட்சுமி அந்தர் ஜனம். ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

Next Story