கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு
கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருடு போனது. என்ஜினீயர் பரமக்குடி அய்யாச்சாமி சந்து பகுதியில் வசித்து வருபவர் போஸ். இவர், பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி
பரமக்குடி,
கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருடு போனது.
என்ஜினீயர்பரமக்குடி அய்யாச்சாமி சந்து பகுதியில் வசித்து வருபவர் போஸ். இவர், பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி. கணவன்–மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தினைக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொள்ள சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் செல்போனில் போசுக்கு தகவல் தெரிவித்தனர்.
35 பவுன் நகை திருட்டுஇதையடுத்து அங்கு வந்த போஸ் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தி பரமக்குடி நகர் போலீசில் புகார் செய்தார்.
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.