பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு 5 மாதங்களுக்கு பிறகு வழக்குப்பதிவு


பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு 5 மாதங்களுக்கு பிறகு வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 26 Dec 2016 4:15 AM IST (Updated: 25 Dec 2016 9:31 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரி அருகே உள்ள ரங்காபுரம் மூலக்கொல்லை தென்றல்நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). லாரி உரிமையாளர். இவருடைய மனைவி தனலட்சுமி (31). இவர் கடந்த ஜூலை மாதம் தனது மொபட்டில் சத்துவாச்சாரி காந்திநகரில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். பொரு

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி அருகே உள்ள ரங்காபுரம் மூலக்கொல்லை தென்றல்நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). லாரி உரிமையாளர். இவருடைய மனைவி தனலட்சுமி (31). இவர் கடந்த ஜூலை மாதம் தனது மொபட்டில் சத்துவாச்சாரி காந்திநகரில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். பொருட்களை வாங்கிக்கொண்டு மொபட்டில் வீடு திரும்பினார். சத்துவாச்சாரி கோர்ட்டு சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே வந்தபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயின் மற்றும் 2 பவுன் செயின் என 5 பவுன் செயினை பறித்துச்சென்று விட்டனர்.

இது குறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார். இந்த புகார் மீது 5 மாதங்கள் கழித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story