டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிப்பால் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. கூட்டத்தில் வலியுறுத்தல்


டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிப்பால் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Dec 2016 4:15 AM IST (Updated: 25 Dec 2016 9:47 PM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகிகள் கூட்டம் தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில்

தஞ்சாவூர்,

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நிர்வாகிகள் கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். வக்கீல் தர்மலிங்கம் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம்மோகன், சீத்தாராமன், மாநகர தலைவர் வல்லம் குணசேகரன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் வாசுகோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்த, அதிர்ச்சியில் மரணம் அடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

நிவாரணம் வழங்க வேண்டும்

சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் கோவி.மோகன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், கணபதி, ஞானசீலன், ஆதிநாராயணன், ராஜவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரத்ததானம்

முன்னதாக ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட த.மா.கா. இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் திருச்செந்தில் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.எல்ஏ. சிதம்பரம், நடராஜன், மாவட்ட பொருளாளர் வக்கீல் தர்மலிங்கம், மாநில தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை த.மா.கா. மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். இதில் த.மா.கா. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story