வள்ளியூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை–பணம் கொள்ளை மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி


வள்ளியூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை–பணம் கொள்ளை மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 26 Dec 2016 4:15 AM IST (Updated: 25 Dec 2016 10:08 PM IST)
t-max-icont-min-icon

வள்ளியூரில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை–பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடிவருகிறார்கள். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் நகர் 1–

வள்ளியூர்,

வள்ளியூரில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை–பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் தேவசிகாமணி(வயது 45). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் டெலிபோன் பூத் வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று விட்டார்.

பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்த தேவசிகாமணி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2½ பவுன் தங்க சங்கிலி, 5 கிராம் மோதிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளைபோய் இருப்பது தெரிய வந்தது.

மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி

வள்ளியூர் காமராஜர் நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் முருகேசன்(40). இவர் தெற்கு வள்ளியூர் அருகே டயர் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் தனது மகன் மற்றும் மகள்களை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டு டயர் தொழிற்சாலைக்கு தனது மனைவியுடன் சென்று விட்டார். அங்கு வேலை அதிகமாக இருந்ததால் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் இரவு அங்கேயே தங்கி விட்டார்.

இதையறிந்த மர்ம நபர்கள் முருகேசனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை தேடியுள்ளனர். ஆனால் அங்கு நகை, பணம் ஏதும் இல்லாததால் பீரோவில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். நேற்று காலை வீட்டிற்கு வந்த முருகேசன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வலைவீச்சு

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story