கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை தூத்துக்குடியில் பிரமாண்ட ‘கேரல் பவனி’
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களிலும் விடிய விடிய சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், கிறிஸ்துவ மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தூத்துக்குடிய
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களிலும் விடிய விடிய சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், கிறிஸ்துவ மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
தூத்துக்குடியில் நள்ளிரவில் நடைபெற்ற பிரமாண்ட கேரல் பவனியில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கேரல் பவனிதூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி தூத்துக்குடி நகரில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள், இளைஞர்கள், ஆலயங்கள் சார்பில் நேற்று முன்தினம் இரவு ‘கேரல் பவனி’ நடத்தப்பட்டது. பவனியில் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பவனி முக்கிய ரோடுகளின் வழியாக வலம் வந்தது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், இளைஞர்கள், சிறுவர்கள் நடனம் ஆடியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
சிறப்பு பிரார்த்தனைதூத்துக்குடி சின்னக்கோவிலில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுத்திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அங்கு ஏசுபாலன் பிறந்ததை குறிக்கும் வகையில் கிறிஸ்து பிறப்பு குடில் திறக்கப்பட்டது. அப்போது கிறிஸ்தவ மக்களும் வாழ்த்துப் பாடல்களை பாடினர்.
பனிமயமாதா ஆலயம்தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை லெரின் டிரோஸ் தலைமையிலும், புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தை சுசீலன் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக நேற்று முன்தினம் இரவு 12 மணி வரையிலும் கடைகள் திறக்க போலீசார் அனுமதி அளித்திருந்தனர். நள்ளிரவு வரை கடைகளில் ஏராளமானோர் குவிந்து புத்தாடைகளையும், பட்டாசு உள்ளிட்ட பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.
கோவில்பட்டிகோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள புனித வளனார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பாளையங்கோட்டை முதன்மை குரு சேவியர் பேரன்ட் அடிகளார் தலைமையில் பாளையங்கோட்டை சவேரியர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கென்னடி அடிகளார், கோவில்பட்டி பங்குதந்தை பீட்டர் ஆகியோர் முன்னிலையில் இந்த பிரார்த்தனை நடந்தது. இதில் பங்கு பேரவை செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை, பொருளாளர் ஜஸ்டின் மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயத்தில் கேக் வெட்டப்பட்டது.
ஞானஸ்தானம்கோவில்பட்டி தூய பவுலின் ஆலயத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு பண்டிகை நற்கருணை ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. குருவானவர் ஆசீர் ஜோசப், இம்மானுவேல் ஆகியோர் ஆராதனை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது 15 பேருக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் திருமண்டல உறுப்பினர் ராஜபாண்டியன், செயலாளர் ஜான் எட்வின் ஆனந்த், பொருளாளர் செல்வின் ராஜ்குமார் மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.