தூத்துக்குடியில் வியாபாரியிடம் ரூ.5¾ லட்சம் மோசடி மற்றொரு வியாபாரி மீது வழக்கு
தூத்துக்குடியில் கம்ப்யூட்டர் உதிரி பாகம் வாங்கி ரூ.5¾ லட்சம் மோசடி செய்த மற்றொரு வியாபாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் உதிரிபாகம் தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ஜெயக்கு
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கம்ப்யூட்டர் உதிரி பாகம் வாங்கி ரூ.5¾ லட்சம் மோசடி செய்த மற்றொரு வியாபாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உதிரிபாகம்தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ஜெயக்குமார். வியாபாரியான இவர், அதே பகுதியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவரிடம், தூத்துக்குடி வி.இ.ரோட்டை சேர்ந்த வியாபாரியான தவசிபெருமாள் மகன் வினோத்குமார் என்பவர் அவ்வப்போது கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கி சென்றுள்ளார். இதற்கான பணத்தை பின்னர் தருவதாக வினோத்குமார் கூறியிருந்தாராம்.
மோசடி
இந்த வகையில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்து 878 மதிப்பிலான கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கியதற்கான மொத்த பணத்தையும் ஜெயக்குமார் கேட்டு உள்ளார். ஆனால் வினோத்குமார் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வினோத்குமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.