தூத்துக்குடியில் ஆட்டோ தீவைத்து எரிப்பு
தூத்துக்குடி பிரையண்ட்நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மாரிமுத்து(வயது 26). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து, ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். இரவில் திடீரென ஆட்டோ தீப்பற்றி எரிந்து உள்ளது. அக்கம
தூத்துக்குடி,
தூத்துக்குடி பிரையண்ட்நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மாரிமுத்து(வயது 26). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு மாரிமுத்து, ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். இரவில் திடீரென ஆட்டோ தீப்பற்றி எரிந்து உள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மாரிமுத்து தீயை அணைத்தார். ஆனால், அதற்குள் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் யாரோ மர்ம ஆசாமி ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து இருப்பது தெரியவந்தது. அந்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story