அரசு ஆஸ்பத்திரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை
காலிப்பணியிடங்கள் இது குறித்து அவர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் இயக்க இயக்குனருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:– திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் 36 காலிப்பணியிடங்கள் உள்ளன
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் தொகுதியிலுள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என, அனிதாராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்இது குறித்து அவர், தமிழ்நாடு மருத்துவ பணிகள் இயக்க இயக்குனருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:– திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் 36 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்க பெறாமல் அவதிப்படுகின்றனர்.
நிரப்ப கோரிக்கைதிருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதன்மை அறுவை சிகிச்சை டாக்டர், 2 மகப்பேறு டாக்டர்கள், 2 மயக்க மருந்து டாக்டர்கள் உள்ளிட்ட 19 காலி பணியிடங்களும், உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் 3 டாக்டர்கள் உள்ளிட்ட 7 காலிப்பணியிடங்களும், காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் 4 டாக்டர்கள் உள்ளிட்ட 10 காலி பணியிடங்களும் உள்ளன. எனவே அரசு ஆஸ்பத்திரிகளில் காலி பணியிடங்களை உடனே நிரப்பி, பொதுமக்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.