கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அருவியில் உற்சாகமாக குளித்தனர்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா தலம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மா
பென்னாகரம்,
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலம்தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஐந்தருவி பகுதி தண்ணீர் இன்றி வறண்டு வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக காவிரி ஆற்றில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து மெயின் அருவியில் தண்ணீர் கொட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வாரவிடுமுறை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து, மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குட்டை போல் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
விற்பனை படுஜோர்பின்னர் தொங்கு பாலம், மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, பார்வைகோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் நேற்று அதிக அளவில் வந்ததால் நடைபாதை, பஸ் நிலையம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
கடந்த சில மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் மீன் கடைகளில் மீன் வறுவல் விற்பனை படுஜோராக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட், ஓட்டல்கள், கடைகளில் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. கூட்டம் அதிகமாக வந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.