பயிர்கள் கருகியதால் விரக்தி: மாரடைப்பால் விவசாயி சாவு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பள்ளிவர்த்தி ஊராட்சி பெரியகுருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமையாபிள்ளை (வயது70). விவசாயி. இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்துவந்தார். இந்த 7 ஏக்கர் நி
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பள்ளிவர்த்தி ஊராட்சி பெரியகுருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமையாபிள்ளை (வயது70). விவசாயி. இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்துவந்தார். இந்த 7 ஏக்கர் நிலத்திலும் நேரடிநெல் விதைப்பு செய்து சுமார் 1 அடி வரை வளர்ந்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிய நிலையில் இருந்ததால், அவர் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராமையாபிள்ளை தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கருகிய நிலையில் இருந்த பயிர்களை ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதை பார்த்து மனமுடைந்து சோகத்துடன் வீட்டுக்கு வந்த ராமையாபிள்ளைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து ராமையாபிள்ளையின் மகன் சுப்ரமணியன் விக்கிரபாண்டியம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது தந்தை பயிர்கள் கருகிவிட்டது என்ற உளைச்சலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று தெரிவித்திருந்தார்.