குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Dec 2016 3:30 AM IST (Updated: 26 Dec 2016 12:26 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே உள்ள ம.மூ.கோவிலூருக்கு உட்பட்ட பாண்டியன் தெரு பகுதியில் சுமார் 100 பேர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியினர் அருகே உள்ள காளியம்மன் கோ

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள ம.மூ.கோவிலூருக்கு உட்பட்ட பாண்டியன் தெரு பகுதியில் சுமார் 100 பேர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியினர் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் சென்று குடிநீர் பிடித்து வந்தனர். இதற்கிடையே நேற்று இரவு அங்கு தண்ணீர் பிடிக்க சென்ற பாண்டியன் தெருவினரை இங்கு வரக்கூடாது என்று சிலர் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பாண்டியன் தெருவிற்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, காலிக்குடங்களுடன் அந்த வழியாக சென்ற பஸ்சை மறித்து திடீரென போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story