கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கடுங்குளிரிலும் கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கடுங்குளிரிலும் கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 26 Dec 2016 3:30 AM IST (Updated: 26 Dec 2016 12:33 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகை ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25–ந்த

ஊட்டி,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

ஏசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25–ந்தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 24–ந் தேதி நள்ளிரவு முதல் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.

இதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர். பின்னர் சரியாக 12 மணிக்கு பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். மேலும் கேக் உள்ளிட்ட இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ந்தனர்.

கடுங்குளிர்

ஊட்டியில் கடந்த சில நாட்களாக உறைபனிப்பொழிவு இருப்பதால் நகரில் கடுங்குளிர் நிலவுகிறது. இந்த கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நீலகிரி மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது. இதில் ஆலய பங்கு குரு ஜான்பாஸ்கோ உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மேலும் கூட்டு பாடற்திருப்பலியும் நடைபெற்றது.

மேரீஸ்ஹில்

ஊட்டி மேரீஹில் பகுதியில் உள்ள மரியன்னை ஆலயத்தில் பங்கு குரு வின்சென்ட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிங்கர் போஸ்ட் தெரசா அன்னை ஆலயத்தில் பங்கு குரு அமல்ராஜ் தலைமையிலும், காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு குரு பீட்டர் தலைமையிலும் கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஊட்டி எச்.பி.எப். ஆலயம், ரோஸ் மவுண்ட் ஆலயம், எல்க்ஹில் புனித ஜூட்ஸ் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் புத்தாடைகள் அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்டீபன் ஆலயம்

ஊட்டி பழைய தபால் நிலைய பகுதியில் உள்ள ஐ.சி. ஆர். எம். சபையில் பாஸ்டர் ராஜன் சாமுவேல் தலைமைலும், பிங்கர்போஸ்ட் புதுவாழ்வு ஆலயத்தில் பாஸ்டர் சூரி தலைமையிலும், ஊட்டி ஸ்டீபன் ஆலயத்தில் ரெவரென்ட் ரமேஷ் பாபு தலைமையிலும் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானர்கள் கலந்து கொண்டனர்.

ஊட்டி மார நாதா திருச்சபையில் பாஸ்டர் ஜார்ஜ் தலைமையிலும், கேத்தி ஈ.சி.ஐ ஆலயத்தில் பாதிரியார் ஸ்டீபன் டேனியல் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கோத்தகிரி வேளாங்கன்னி மாதாஆலயம், கூடலூர் புனித மரியன்னை ஆலயம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

குன்னூர்

குன்னூர் பகுதியில் கத்தோலிக்க சபையை சேர்ந்த புனித அந்தோணியார் ஆலயம், பாய்ஸ்கம்பெனி அன்னை வேளாங்கண்ணி ஆலயம், அருவங்காடு நற்செய்தி நிலையம் போன்ற ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஆராதனைகள் நடந்தன. சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்துக்குட்பட்ட குன்னூர் வெஸ்லி ஆலயம், அருவங்காடு அந்திரேய ஆலயம், நல்லப்பன் தெரு ஜோசப் ஆலயம் ஆகிய ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடந்தது. இதே போல் மற்ற ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கிறிஸ்தவர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


Next Story