10–ம் வகுப்பு மாணவன் கொலை: தலைமறைவான மளிகை வியாபாரியை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு


10–ம் வகுப்பு மாணவன் கொலை: தலைமறைவான மளிகை வியாபாரியை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 26 Dec 2016 12:51 AM IST (Updated: 26 Dec 2016 12:51 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் புதுகாலனியை சேர்ந்தவர் சங்கர் என்கிற ஜெயசங்கர்(வயது 37). இவர் அதே கிராமத்தில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெயபிரகாஷ்(16). இவன் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் புதுகாலனியை சேர்ந்தவர் சங்கர் என்கிற ஜெயசங்கர்(வயது 37). இவர் அதே கிராமத்தில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெயபிரகாஷ்(16). இவன் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 23–ந் தேதி அதிகாலையில் பால் வாங்க சென்ற ஜெயபிரகாஷ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தான். அவனை ஜெயசங்கர் கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மளிகை வியாபாரியை பல இடங்களில் தேடி வருகின்றனர்.


Next Story