ரூ.900 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுத்திட்டமான பவானிஆற்றில் நீர்த்தேக்கம் அமைத்து தண்ணீர் கொண்டுவர வேண்டும் அத்திக்கடவு–அவினாசி திட்ட போராட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்


ரூ.900 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுத்திட்டமான பவானிஆற்றில் நீர்த்தேக்கம் அமைத்து தண்ணீர் கொண்டுவர வேண்டும் அத்திக்கடவு–அவினாசி திட்ட போராட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 26 Dec 2016 4:00 AM IST (Updated: 26 Dec 2016 12:58 AM IST)
t-max-icont-min-icon

ரூ.900 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுத்திட்டமான பவானி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அத்திக்கடவு–அவினாசி திட்ட போராட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்திக்கடவு–அவினாசி திட்டம் அ

அவினாசி

ரூ.900 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுத்திட்டமான பவானி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அத்திக்கடவு–அவினாசி திட்ட போராட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்திக்கடவு–அவினாசி திட்டம்

அத்திக்கடவு–அவினாசி திட்ட போராட்டக்குழு கூட்டமைப்பு கூட்டம் அவினாசி கொங்கு கலை அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன்? என்கிற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப போராடும் இயக்க தலைவர் அம்பலவாணன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் மேயர் செல்வராஜ், பி.ஆர். பாண்டியன், கே.கே.சி. பாலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், தங்கவேல், மற்றும் அர்ஜுன் சம்பத், ஈஸ்வரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மாற்றுத்திட்டம்

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய வறட்சி பகுதிகளில் உள்ள 71 குளங்கள் மற்றும் 538 குட்டைகளுக்கு பவானி ஆற்றின் நீரை கொண்டு வர பொது பனித்துறை ரூ.3,523 கோடி செலவில் ஒரு மாற்று திட்டத்தை தயாரித்துள்ளது.

ஆனால் ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர்களும் அத்திக்கடவு–அவினாசி திட்ட போராட்ட குழுவினரும் ஒரு மாற்று திட்டத்தை தயாரித்து உள்ளனர். அந்த திட்டத்தின்படி பவானி ஆற்றில் வெள்ளியங்காடு–கண்டியூர் பகுதியில் புதிய நீர்த்தேக்கத்தை அமைத்து அதில் இருந்து சாலை ஓரத்தில் குழாய்கள் மூலம் மேற்படி 3 மாவட்டங்களில் உள்ள குளம் குட்டைகளை நிரப்ப சுமார் ரூ.900 கோடி மட்டுமே செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த மாற்று திட்டத்தினை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வது, இந்த ஆண்டு நீர் நிலைகள் வறண்டு குடிநீர் ஆதாரம் மிகவும் குறைந்து வருவதாலும், விவசாயம் பாழடைந்து வருவதாலும், கால் நடைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதாலும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட பகுதிகளையும் வறட்சி பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story