பாலப்பள்ளத்தில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் திறப்பு மின்னொளியில் ஜொலித்தது


பாலப்பள்ளத்தில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் திறப்பு மின்னொளியில் ஜொலித்தது
x
தினத்தந்தி 26 Dec 2016 4:00 AM IST (Updated: 26 Dec 2016 1:11 AM IST)
t-max-icont-min-icon

பாலப்பள்ளத்தில் 90 அடி நீளத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா நடந்தது. வின்ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி தலைவர் தங்கப்பன் தலைமையில், மத்திக்கோடு சேகரசபை முதன்மை போதகர் ஜே.விக்டர் ஞானராஜ் திறந்து வைத்தார். இத

குளச்சல்

பாலப்பள்ளத்தில் 90 அடி நீளத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா நடந்தது. வின்ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி தலைவர் தங்கப்பன் தலைமையில், மத்திக்கோடு சேகரசபை முதன்மை போதகர் ஜே.விக்டர் ஞானராஜ் திறந்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த குடில் இரவில் மின்னொளியில் ஜொலித்தது.

இந்த குடிலை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இதையொட்டி அந்த பகுதியில் பொழுது போக்கு அம்சங்களான ராட்டினங்கள், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. குடிலை ஜனவரி 1–ந்தேதி வரை பொது மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 1–ந்தேதி புத்தாண்டு மெகா பரிசு சீட்டு குலுக்கல் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு டாட்சுன் ரெடிகேர் கார் வழங்கப்படும். மேலும் 2–வது, 3–வது பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்த தகவலை வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டியினர் தெரிவித்தனர்.


Next Story